/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலில் 15 அடி உயர டவரில் யோகாசனம்! சிறுவனுக்கு உலக சாதனை புத்தகத்தில் இடம்
/
வெயிலில் 15 அடி உயர டவரில் யோகாசனம்! சிறுவனுக்கு உலக சாதனை புத்தகத்தில் இடம்
வெயிலில் 15 அடி உயர டவரில் யோகாசனம்! சிறுவனுக்கு உலக சாதனை புத்தகத்தில் இடம்
வெயிலில் 15 அடி உயர டவரில் யோகாசனம்! சிறுவனுக்கு உலக சாதனை புத்தகத்தில் இடம்
ADDED : ஜூலை 15, 2024 01:18 AM

கோவை;சுட்டெரிக்கும் வெயிலில், 15 அடி உயர டவரில் யோகாசனம் செய்து, 12 வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சரண்யா, பாலசுந்தரம் தம்பதியின் மகன் சர்வஜித் நாராயணன், 12; ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சிறு வயதிலேயே யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
வீடு முழுவதும் கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்கள் குவித்து வைத்துள்ளார். சர்வஜித் நாராயணன் தற்போது, 15 அடி உயரத்தில் யோகா செய்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வஜித் நாராயணன் பயிலும் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், 15 அடி உயரத்தில் டவர் ஒன்று அமைக்கப்பட்டது.
அதன் மீது ஏறிய சர்வஜித் நாராயணன், அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து, 7 நிமிடங்கள்,20 விநாடிகள் செய்து, யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இதற்காக ரஷ்ய நாட்டில் இருந்து வந்த, யூனியன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட், சர்வஜித் நாராயணின் சாதனையை நேரடியாக கண்காணித்தார். தொடர்ந்து சிறுவனின் சாதனையை அங்கீகரித்த அவர், வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
15 அடி உயரத்தில், கைகளை மட்டுமே பேலன்ஸ் செய்து, சுட்டெரிக்கும் வெயிலில் ஆங்கிள் போஸில் யோகா செய்த சிறுவனின், இந்த உலக சாதனையை அவரது பள்ளியில் பயிலும், சக மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.