/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
15 நாய்க்குட்டிகளுக்கு கிடைத்தது நல்வாழ்வு
/
15 நாய்க்குட்டிகளுக்கு கிடைத்தது நல்வாழ்வு
ADDED : ஆக 04, 2024 11:02 PM
கோவை : கோவை விலங்குகள் நல நண்பர்கள் குழுசார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தத்தெடுப்பு நிகழ்வில், பொதுமக்கள் 15 நாட்டு நாய்க்குட்டிகளை தத்தெடுத்தனர்.
கோவை, ரேஸ்கோர்ஸில் தனியார் கல்லூரி வளாகத்தில், 'சில்லென்ற மாலை' நிகழ்ச்சி நடந்தது. இதில், விலங்குகள் நல நண்பர்கள் குழு (சி.ஏ.,டபிள்யூ.எப்.ஜி.,) சார்பில், நாய்க்குட்டிகளை தத்தெடுப்பதற்கான ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது.
சாலைகளில் ஆதரவின்றி நாய்கள் சுற்றித் திரிவதைத் தடுக்க, நாய்க்குட்டிகளை விரும்புவோருக்கு தத்துக்கொடுக்கும் வகையில், இந்த ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்தும் நாட்டு இன நாய்கள். 15 நாய்க்குட்டிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கொண்டு சென்றனர்.
இந்த 15 நாய்க்குட்டிகளுக்கு, தடுப்பூசி போடப்பட்டே தத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், பாலகிருஷ்ணன், காவியன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.