/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் 160 வகையான அந்நிய களை செடிகள்; கருத்தரங்கில் தகவல்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் 160 வகையான அந்நிய களை செடிகள்; கருத்தரங்கில் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலையில் 160 வகையான அந்நிய களை செடிகள்; கருத்தரங்கில் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலையில் 160 வகையான அந்நிய களை செடிகள்; கருத்தரங்கில் தகவல்
ADDED : மார் 07, 2025 08:12 PM

பெ.நா.பாளையம்:
துடியலூர் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில், முது அறிவியல், விலங்கியல் மற்றும் ஆய்வுத்துறை, வன விலங்கு உயிரியல் துறை ஆகியன கொல்கத்தா இந்திய விலங்கியல் ஆய்வகத்துடன் இணைந்து, 'மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை துவக்கியது.
நிகழ்ச்சியில், கோவை சுற்றுச்சூழல், மாநில வன சேவைக்கான மத்திய அகாடமியின் தலைமை வன பாதுகாவலர் திருநாவுக்கரசு பேசுகையில், மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு பெரும் சவாலாக கட்டடங்களின் பெருக்கம் உள்ளது.
வனவிலங்குகள் செல்லும் வழித்தடங்களில் கட்டடங்களை கட்டுவதால், மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுவதுடன் விலங்குகளுக்கான உணவு, நீர் ஆகியவை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை, 160 வகையான அந்நிய களைச் செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. அவை நம்முடைய மண் சார்ந்த தாவரங்கள் அழிவுக்கு காரணமாக உள்ளன. என்றார்.
விழாவில், கருத்தரங்கின் ஆய்வு சுருக்க புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், சென்னை பாம்பு பூங்கா அறக்கட்டளையின் நிர்வாக தலைவர் பால்ராஜ், கேரள வன ஆராய்ச்சியின் முன்னாள் இயக்குனர் ஈஷா, மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமை வன பாதுகாவலர் திலீப் குமார், கொங்குநாடு கல்லூரியின் செயலாளர் வாசுகி, கல்லூரி முதல்வர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.