/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு ஊழியர் சங்க16வது ஒன்றிய மாநாடு
/
சத்துணவு ஊழியர் சங்க16வது ஒன்றிய மாநாடு
ADDED : பிப் 24, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது ஒன்றிய மாநாடு அன்னுாரில் நடந்தது.
சங்கத்தின் ஒன்றிய தலைவர் திலகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி பேசினார்.
சங்க ஒன்றிய செயலாளர் தங்கமணி, பொருளாளர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தாமோதரசாமி, மருதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில் சத்துணவு ஊழியர்கள், காலிப்பணியிடங்களை சிறப்பு கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.