/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி தொகுதியில் 18 வேட்பாளர்கள் 'பேலட் யூனிட்' குழப்பத்தில் அதிகாரிகள்
/
பொள்ளாச்சி தொகுதியில் 18 வேட்பாளர்கள் 'பேலட் யூனிட்' குழப்பத்தில் அதிகாரிகள்
பொள்ளாச்சி தொகுதியில் 18 வேட்பாளர்கள் 'பேலட் யூனிட்' குழப்பத்தில் அதிகாரிகள்
பொள்ளாச்சி தொகுதியில் 18 வேட்பாளர்கள் 'பேலட் யூனிட்' குழப்பத்தில் அதிகாரிகள்
ADDED : மார் 29, 2024 10:58 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில், யாரும் வாபஸ் பெறாவிட்டால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இரண்டு 'பேலட் யூனிட்' பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்துார் சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆண்கள், 7,66,077, பெண்கள், 8,15,428 மற்றும் மற்றவர்கள், 290 என மொத்தம், 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 795 வாக்காளர்கள் உள்ளனர். நகரப்பகுதியில், 821, கிராமப்புற பகுதியில், 880 என மொத்தம், 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
பொள்ளாச்சி தொகுதியில் 29 பேர், 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனையில், அரசியல் கட்சியினர் கூடுதலாக தாக்கல் செய்த மனுக்கள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் என மொத்தம், 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, ஆறு அரசியல் கட்சிகள், 12 சுயே., என மொத்தம், 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பேலட் யூனிட்டில், 15 வேட்பாளர்கள், ஒரு நோட்டா என மொத்தம், 16 எண் வரை பயன்படுத்தலாம். வேட்பாளர் எண்ணிக்கை அதற்கு மேல் இருந்தால், இரண்டாவது பேலட் யூனிட் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
தற்போது நிலவரப்படி வேட்பாளர்கள் எண்ணிக்கை, 18 என உள்ளது. இதில் யாரும் வாபஸ் பெறாவிட்டால், இரண்டு பேலட் யூனிட் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
இன்று வரை (30ம் தேதி), வேட்புமனு வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேர் வாபஸ் பெற்றால், ஒரே பேலட் யூனிட் போதும்.
அதிகாரிகள் தரப்பில், சுயே., வேட்பாளர்களில் எப்படியும் வாபஸ் வரும்; வந்தால், ஒரே பேலட் யூனிட் பயன்படுத்தலாம். வேட்புமனுக்கள் வாபஸ் முடிந்த பின்னரே இயந்திரம் பயன்பாடு குறித்து தெரியும் என, தெரிவிக்கப்பட்டது.

