தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதைப்பொருள் அதிரடிப்படை  சார்பில் 19 வழக்குகள்  பதிவு 

போதைப்பொருள் அதிரடிப்படை  சார்பில் 19 வழக்குகள்  பதிவு 

போதைப்பொருள் அதிரடிப்படை  சார்பில் 19 வழக்குகள்  பதிவு 


ADDED : ஜூலை 08, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கடந்த மே மாதம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு படை தமிழக அரசால் அமைக்கப்பட்டது. கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

கோவையில் இப்படைக்காக பிரத்யேக ஸ்டேஷன் அமைக்கப்படவுள்ளது. இக்குழு மே 14ம் தேதி முதல் ஜூலை 3ம்  தேதி வரை 10 கஞ்சா, 9 தடை செய்யப்பட்ட  போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. 22 கிலோ கஞ்சா  22 கிராம் மெத்தபிட்டமைன், 1,313 புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

போலீசார் கூறுகையில், ‘கடந்த 50 நாட்களில், 19 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தவிர, மாநகர போலீசாரால் கஞ்சா பிரிவின் கீழ், 88 வழக்குகளும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பிரிவில் 134 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us