/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாம்பு வீடியோவை பகிர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது
/
பாம்பு வீடியோவை பகிர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது
ADDED : மே 28, 2024 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இருவரும் வனவிலங்கு பாதுகாப்பு அட்டவணையில் உள்ள இந்திய எலி, பாம்பை உரிய அனுமதியின்றி பிடித்து, வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த அரிய வகை பாம்பு 8 அடி நீளம் கொண்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கோவை வனத்துறையினர் இருவர் மீதும், 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்கு பதிந்தனர். இருவரும் கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.