/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவண்ணாமலைக்கு 2 சிறப்பு பஸ்கள்
/
திருவண்ணாமலைக்கு 2 சிறப்பு பஸ்கள்
ADDED : மார் 22, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப் பாதையில், மாதம் தோறும் பவுர்ணமி நாட்களில், பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, கடவுளை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாதம் பவுர்ணமி வரும் 24 ம் தேதி வருகிறது.
இதையடுத்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் அதிகம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 24ம் தேதி காலை முதல் 2 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.----

