/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அணையில் 20 செ.மீ., மதகு திறப்பு
/
சிறுவாணி அணையில் 20 செ.மீ., மதகு திறப்பு
ADDED : செப் 05, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 8 மி.மீ., மழை பதிவானது. நீர் மட்டம், 43.23 அடியாக உயர்ந்திருக்கிறது.
தடாகம் ரோட்டில் ஜி.சி.டி., கல்லுாரி அருகே, 300 எம்.எம்., விட்டமுள்ள குழாயில் வால்வு சீரமைக்கும் பணி நடக்கிறது.
அதன் காரணமாக, சிறுவாணி அடிவாரத்தில், 1000 எம்.எம்., விட்டமுள்ள குழாய் வால்வு அடைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் தேவைக்காக, 5.65 கோடி லிட்டர் மட்டும் தண்ணீர் எடுக்கப்பட்டது. இச்சூழலில், சிறுவாணி அணையில், 20 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.