/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு; எப்போது அறிவிப்பு?
/
அரசு கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு; எப்போது அறிவிப்பு?
அரசு கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு; எப்போது அறிவிப்பு?
அரசு கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு; எப்போது அறிவிப்பு?
ADDED : ஜூன் 25, 2024 12:20 AM
கோவை:அரசுக் கல்லூரிகளில், 20 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை, அரசு விரைவில் வெளியிட வேண்டும் என, கல்லூரி முதல்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 171 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் பொது கலந்தாய்வு நிறைவடைந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் அரசு கல்லூரிகளில், 20 சதவீத கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்குப் பின், அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், கல்லூரிகளில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுவதோடு, பல மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமலும், போவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில், '20 சதவீத கூடுதல் ஒதுக்கீடு தொடர்பாக, அரசு முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டால், வறுமை நிலையில் உள்ள பல மாணவர்களுக்கு, அரசு கல்லூரியிலேயே சேர வாய்ப்பு கிடைக்கும்.
சேர்க்கை முடிந்த பின், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதால் பல மாணவர்களால், உயர்கல்வி வாய்ப்பை தொடர முடியாமல் போகிறது. கல்லூரியிலும் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.