ADDED : மே 29, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
சாய்பாபா காலனி: சாய்பாபாகாலனி ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் எண்ணை கொண்டு, உரிமையாளர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். தகவல் வராததால், நேற்று முன்தினம் இரவு 20 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
‘பறிமுதல் செய்துள்ள வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளோம். ஆதாரங்களை காண்பித்து மீட்டுக்கொள்ளலாம். பிற வாகனங்கள் ஏலம் விடப்படும்’ என்கின்றனர் போலீசார்.
