/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ முகாமில் 200 பேருக்கு சிகிச்சை
/
மருத்துவ முகாமில் 200 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 02, 2024 02:34 AM
அன்னூர்;கரியாம்பாளையத்தில் நடந்த மருத்துவ முகாமில், 200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
கரியாம்பாளையம் ஊராட்சி மன்றம் மற்றும் நைருதி கலை, அறிவியல் கல்லூரி சார்பில், பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம், நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
ஊராட்சித் தலைவர் செல்வி வடிவேல் தலைமை வகித்தார். முகாமை கல்லூரி முதல்வர் குமரவேல் துவக்கி வைத்தார். ராம் மருத்துவமனை மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. மாலைக்கண் நோய், கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட கண் நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
உதவி பேராசிரியர்கள் சுரேஷ், மைதிலி மற்றும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.