/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் வந்தது 2 ஆயிரம் டன் நெல் அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைப்பு
/
ரயிலில் வந்தது 2 ஆயிரம் டன் நெல் அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைப்பு
ரயிலில் வந்தது 2 ஆயிரம் டன் நெல் அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைப்பு
ரயிலில் வந்தது 2 ஆயிரம் டன் நெல் அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைப்பு
ADDED : பிப் 24, 2025 10:00 PM

பொள்ளாச்சி, ; திருவாரூரில் இருந்து, 2 ஆயிரம் டன் நெல், சரக்கு ரயில் வாயிலாக கொண்டு வரப்பட்டு, பொள்ளாச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள, நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, நெல் இருப்பு வைக்கப்பட்டது. அவை, தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்க, சரக்கு ரயில்கள் வாயிலாக கொண்டு வரப்படுகிறது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த சரக்கு ரயிலில், நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேற்பார்வையாளர் சுரேஷ், உதவி அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:
திருவாரூர் பகுதியில் மழைக்காலத்துக்கு முன், 'கிரேடு ஏ' நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், 22 ஆயிரம் டன் நெல் கோவை மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட உள்ளது.
அதில், வடகோவை, சிங்காநல்லுார், சித்தாபுதுார், மேட்டுப்பாளையம் பெப்பர் குடோன், பூசாரிபாளையம், கருமத்தம்பட்டி பகுதிகளில் இருப்பு வைக்கப்பட உள்ளது.
அதில், பொள்ளாச்சி சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்க, 41 பெட்டி கொண்ட சரக்கு ரயிலில், 48,763 மூட்டைகளில், 2 ஆயிரம் டன் நெல் கொண்டு வரப்பட்டது. அவை பாதுகாப்பாக, 120 லாரிகளில் ஏற்றப்பட்டு, தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.