ADDED : ஜூன் 17, 2024 10:53 PM
சூலுார்:சூலுார் தாலுகாவில் வரும், 20 ம் தேதி ஜமா பந்தி துவங்குகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும்.
கருமத்தம்பட்டி உள் வட்டத்தில் உள்ள பதுவம்பள்ளி, கணியூர், காடுவெட்டி பாளையம், மோப்பிரிபாளையம், கிட்டாம்பாளையம், அரசூர், செம்மாண்டாம் பாளையம், கரவழி மாதப்பூர், கருமத்தம்பட்டி, நீலம்பூர், மைலம்பட்டி ஆகிய கிராமங்களுக்கான ஜமா பந்தி, 20 ம்தேதி நடக்கிறது. சூலுார் உள்வட்டத்தில் உள்ள, இருகூர், ராசிபாளையம், காடாம்பாடி, காங்கயம்பாளையம், சூலுார், கண்ணம்பாளையம், ஒட்டர் பாளையம், பட்டணம், பீடம் பள்ளி, கலங்கல் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி, 21ம்தேதி நடக்கிறது.
முதியோர் உதவி தொகை, வாரிசு சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட மனுக்களை பொதுமக்கள் ஜமா பந்தியில் அளித்து தீர்வு பெறலாம், என, வருவாய்த்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.