/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 தேர்வு எழுதிய 21 கைதிகளும் தேர்ச்சி
/
பிளஸ் 2 தேர்வு எழுதிய 21 கைதிகளும் தேர்ச்சி
ADDED : மே 06, 2024 11:41 PM

கோவை:பிளஸ் 2 தேர்வு எழுதிய சிறைக்கைதிகள், 21 பேரும் தேர்வில் வெற்றி பெற்றனர்.
கோவை மத்திய சிறையில், 2,300 க்கும் அதிகமான சிறைவாசிகள் உள்ளனர். இவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு, யோகா, கல்வி, தொழிற்கல்வி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த, 2023 - 24 ம் கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 21 சிறைக்கைதிகள் எழுதினர்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதிய அனைத்து சிறைக்கைதிகளும் தேர்வில், வெற்றி பெற்றனர். இதில் சிறைக் கைதிகளாக இருந்த, சுப்புராஜ், 464, மன்சூர், 457, மோகன்ராஜ், 447 மதிப்பெண்கள் பெற்று முறையே முதல், மூன்று இடங்களை பிடித்தனர்.
தேர்ச்சி பெற்ற சிறைவாசிகள் அனைவரையும் கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தில்குமார், பாராட்டினார்.