/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
210 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
210 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : பிப் 21, 2025 11:24 PM
போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,முத்துகுமார். நேற்று முன்தினம், ஈச்சனாரி பாலம் சர்வீஸ் சாலை பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டார். அவ்வழியே வேகமாக வந்த, இரு கார்களை நிறுத்தி சோதனை செய்தார்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், திருப்பூர், அம்மாபாளையம், ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்த சரவணன், 38, எஸ்.எஸ்.குளம், குரும்பபாளையம், வடக்கு வீதியை சேர்ந்த பழைய பேப்பர் வியாபாரி முருகன், 32 என்பதும், பெங்களூருவிலிருந்து புகையிலை பொருட்களை வாங்கி, விற்பனை செய்வதும் தெரிந்தது.
தொடர்ந்து, ரூ.2 லட்சம் மதிப்புடைய, 210 கிலோ புகையிலை பொருட்களுடன், இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

