/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் 22 சவரன் நகை திருட்டு
/
சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் 22 சவரன் நகை திருட்டு
சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் 22 சவரன் நகை திருட்டு
சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் 22 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 15, 2024 03:23 AM
கோவை : இரு வேறு சம்பவங்களில், 22 சவரன் தங்க நகை திருடு போனது தொடர்பாக, சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கணபதிமாநகரை சேர்ந்தவர் மகேஷ்,32; 'டேட்டா' இன்ஜினியர். கடந்த 10ம் தேதி மதியம், 12:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்கு சென்றுவிட்டார். 12ம் தேதி இரவு, 7:45 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த மர்மநபர் அலமாரியில் இருந்த, 16.25 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1,000 ரொக்கம் திருடு போயிருந்தது.
* விளாங்குறிச்சி, திருநகரை சேர்ந்த செந்தில்,45, கடந்த 10ம் தேதி தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு கேரளா சென்றுள்ளார்.
கடந்த, 12ம் தேதி இரவு 7:30 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இரு அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த ஆறு சவரன் தங்க நகை, 40 கிராம் வெள்ளியை, மர்ம நபர்கள் திருடிசென்றது தெரிந்தது.
இரு வேறு சம்பவங்கள் தொடர்பான புகார்களின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சி பதிவுகள் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.