/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இல்லம் தேடி கல்வி திட்டம், 2.ஓ.,' துவக்கம் ஆனைமலை வட்டாரத்தில் 220 மையங்கள்
/
'இல்லம் தேடி கல்வி திட்டம், 2.ஓ.,' துவக்கம் ஆனைமலை வட்டாரத்தில் 220 மையங்கள்
'இல்லம் தேடி கல்வி திட்டம், 2.ஓ.,' துவக்கம் ஆனைமலை வட்டாரத்தில் 220 மையங்கள்
'இல்லம் தேடி கல்வி திட்டம், 2.ஓ.,' துவக்கம் ஆனைமலை வட்டாரத்தில் 220 மையங்கள்
ADDED : ஜூலை 03, 2024 02:49 AM

ஆனைமலை;ஆனைமலையில், 'இல்லம் தேடி கல்வி திட்டம், 2.ஓ' துவங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, 'இல்லம் தேடி கல்வித்திட்டம், 2.ஓ' எனும் பெயரில், புதிய மாற்றங்களுடன் மேம்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இருந்த இத்திட்டமானது, தற்போது தொடக்க வகுப்பு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனைமலை வட்டாரம் மலைப்பகுதிகளை உள்ளடக்கிய கல்வியில் சிறப்பு கவனம் பெற வேண்டிய பகுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அதனால், மொத்தம், 220 இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
இதை தொடர்ந்து, புதிய மையங்கள் தேவைப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு, புதிய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டும், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த தன்னார்வல்களின் மையங்களை மதிப்பீட்டின் வாயிலாக அவர்களை மறு நியமனம் செய்யப்பட்டது.
கடந்த, இரண்டு மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டம், ஆனைமலை வட்டாரத்தில் துவங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் எண்ணும், எழுத்தும் கற்பித்தல் முறையை பின்பற்றி இல்லம் தேடி கல்வி மையங்களும் கற்பிப்பதன் வாயிலாக, கற்றலை வலுப்படுத்தும் வகையில், '2.ஓ' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், எண்ணும், எழுத்தும் கற்பித்தல் முறை குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இம்மையங்களில் மாணவர்களுக்கான தேர்வுகள், 'ஓஎம்ஆர்' தேர்வுத்தாளில் எழுத வைக்கப்பட்டு, அவை செயலியில் உள்ளீடு செய்து மாணவர்களின் கல்வித்தர முன்னேற்றம் பகுப்பாய்வு செய்யப்படும். அதன்பின், தொடர் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
இதன் அடிப்படையில், இந்தாண்டு செயல்பட உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை வட்டார கல்வி அலுவலர்கள் சின்னப்பராஜ், செல்வமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.தலைமையாசிரியர்கள் இசுரவேல், செல்வராஜ், ஜீவகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.