/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல் தலைமை சங்க தலைவர் பேட்டி

ADDED : ஆக 18, 2024 01:33 AM

பொள்ளாச்சி;''பி.சி.,யில் இருந்து எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்,'' என, தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்க தலைவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில், தமிழ்நாடு, 24மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், சமுதாய மக்கள், மற்ற சமுதாய மக்களுக்கு கல்வி உதவி உள்ளிட்டவை வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் நடராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
மேலும், ஆதரவற்ற மாணவியருக்கு தையல் மெஷின்களும் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சியில், ஆம்புலன்ஸ் சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த, 50 ஆண்டு காலமாக பி.சி., பிரிவில் இருந்து நீக்கி, எம்.பி.சி., பட்டியலில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். எம்.பி.சி., பிரிவில் சேர்க்காததால், எங்களது சமுதாயத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.
இக்கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்டமாக, சங்க நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும். அதன்பின், தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், எங்களது குரல் உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்கும். அடுத்த தேர்தலில் யாருக்கும் ஓட்டு போட மாட்டோம்.
இது குறித்து தொடர் அமைதி வழியான போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.