sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பா.ம.க., பிரமுகர் கொலை தகவல் தந்தால் ரூ.25 லட்சம்

/

பா.ம.க., பிரமுகர் கொலை தகவல் தந்தால் ரூ.25 லட்சம்

பா.ம.க., பிரமுகர் கொலை தகவல் தந்தால் ரூ.25 லட்சம்

பா.ம.க., பிரமுகர் கொலை தகவல் தந்தால் ரூ.25 லட்சம்


ADDED : மே 26, 2024 01:31 AM

Google News

ADDED : மே 26, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலைக் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும்' என, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., சார்பில், கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க., பிரமுகரான இவரை, 2019ல் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 39, கும்பகோணம் மேலக் காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத், 42, வடக்கு மாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன், 33, திருவிடைமருதுாரைச் சேர்ந்த சாஹுல் ஹமீது, 32, திருமங்கலக்குடியைச் சேர்ந்த நபீல் ஹாசன், 33, ஆகிய ஐந்து பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இவர்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

அதன்படி, ஐந்து குற்ற வாளிகளின் பெயர், வயது, புகைப்படம் அடங்கிய விபரங்களுடன் கூடிய சுவரொட்டிகளை, கோவையில் பல்வேறு இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஒட்டிஉள்ளனர்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:

இந்த ஐந்து குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிந்தால், தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம்.

மேலும், 94999 45100, 99623 61122, 044 2661 5100 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், info-che.nia@gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதுடன், ஒரு குற்றவாளிக்கு 5 லட்ச ரூபாய் வீதம், ஐந்து குற்றவாளிகளுக்கும் சேர்த்து 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அச்சிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us