/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமற்ற உணவு 252 கிலோ பறிமுதல்! 57 கடைகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
/
தரமற்ற உணவு 252 கிலோ பறிமுதல்! 57 கடைகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
தரமற்ற உணவு 252 கிலோ பறிமுதல்! 57 கடைகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
தரமற்ற உணவு 252 கிலோ பறிமுதல்! 57 கடைகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 11, 2024 11:18 PM

கோவை : கோவையில், பானிபூரி கடைகளில், 252.45 கிலோ தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 57 கடைகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் அறிவுறுத்தலின் படி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், 10 குழுக்களாக பிரிந்து, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தயாரிக்கப்படும் இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:
பானிபூரி தயாரிக்கும் இடம் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட பானிபூரி 10 ஆயிரம் எண்ணிக்கை மற்றும் அழுகிய நிலையில் இருந்த உருளை கிழங்கு 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் பானிபூரி தயாரிக்க பயன்படுத்தப்படும், 5 மூலப்பொருட்கள் உணவு மாதிரிக்கு எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கையின் முடிவில் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தயாரிப்பின் போது மேலங்கி, தலைக்கவசம் மற்றும் கையுறை அணியாமலும், சுகாதாரமாக இடத்தை பராமரிக்காமல் வைத்திருந்த, நிறுவனத்தின் தயாரிப்பை நிறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 278 கடைகளை ஆய்வு செய்ததில், 57 கடைகள் மற்றும் தயாரிப்பு இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 15 உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக, 23 கடைகளுக்கு அபராதமாக ரூ.46 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.
பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானிபூரி தயாரிக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், 223 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும், 9 தயாரிப்பு இடங்களில் அதிக கலர் நிறமி சேர்க்கப்பட்ட, 98.5 லிட்டர் பானி மற்றும், 62 கிலோ பூரி, 34.5 கிலோ தரமற்ற காளான், 88.5 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, 12 கிலோ தரமற்ற உருளை கிழங்கு போன்ற உணவு பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல சில்லி சிக்கன், நுாடுல்ஸ், புரோட்டா, 55.45 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம், உணவு பொருட்கள்,252 கிலோபறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.