/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
26 ஆயிரம் கி.மீ., ஓடியுள்ளது முன்னாள் மேயரின் 'கிரிஸ்டா'
/
26 ஆயிரம் கி.மீ., ஓடியுள்ளது முன்னாள் மேயரின் 'கிரிஸ்டா'
26 ஆயிரம் கி.மீ., ஓடியுள்ளது முன்னாள் மேயரின் 'கிரிஸ்டா'
26 ஆயிரம் கி.மீ., ஓடியுள்ளது முன்னாள் மேயரின் 'கிரிஸ்டா'
ADDED : ஆக 22, 2024 12:45 AM
கோவை: கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கல்பனா, பதவியில் இருந்த காலகட்டத்தில், அவருக்கு வழங்கிய 'இன்னோவா கிரிஸ்டா' காரில், 26 ஆயிரத்து, 764 கி.மீ., துாரத்துக்கு பயணித்திருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர், 19வது வார்டு (தி.மு.க.,) கவுன்சிலர் கல்பனா. இவரது பயன்பாட்டுக்கு மாநகராட்சி சார்பில் 'இன்னோவா கிரிஸ்டா' கார், மைக், ஆர்.எஸ்.புரம் பங்களா வழங்கப்பட்டிருந்தது. தனது குடும்ப சூழல், உடல் நிலையை காரணம் காட்டி, மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சியால் வழங்கப்பட்ட காரை (டி.என். 66 ஏகே 7800), ஜூலை 4ம் தேதி திரும்ப ஒப்படைத்தார். அதன்பின், ஆர்.எஸ்.புரம் பங்களாவை காலி செய்தார்.
முன்னாள் மேயர் கல்பனா பதவியில் இருந்த காலத்தில், 2022 ஆக., 29 முதல், 2024 ஜூலை 4ம் தேதி வரை, 26 ஆயிரத்து, 764 கி.மீ., துாரத்துக்கு காரை பயன்படுத்தியிருக்கிறார். பராமரிப்புக்காக மட்டும், 83 ஆயிரத்து, 394 ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம், 3,590 லிட்டர் எரிபொருள் உபயோகித்திருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கோவை மாநகராட்சியின் பொது தகவல் அலுவலரான, தலைமை பொறியாளர் பதிலளித்திருக்கிறார்.