/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்அதாலத் விசாரணையில் 2,843 வழக்குகளில் சமரச தீர்வு
/
லோக்அதாலத் விசாரணையில் 2,843 வழக்குகளில் சமரச தீர்வு
லோக்அதாலத் விசாரணையில் 2,843 வழக்குகளில் சமரச தீர்வு
லோக்அதாலத் விசாரணையில் 2,843 வழக்குகளில் சமரச தீர்வு
ADDED : ஜூன் 09, 2024 12:39 AM
கோவை:கோவை மாவட்டத்தில் நடந்த லோக்அதாலத் விசாரணையில் 2,843 வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டு, 29.92 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்கில் தீர்வு காண, லோக்அதாலத் விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நீதிமன்றங்களில் நேற்று நடந்தது.
கோவை கோர்ட் வளாகத்தில் விசாரணையை, மாவட்ட நீதிபதி விஜயா துவக்கி வைத்தார். சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம் , கல்வி கடன், நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை உள்ளிட்ட சிவில் வழக்குகள், நில ஆர்ஜிதம், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
விசாரணையில், மொத்தம், 2,843 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது. இதன் வாயிலாக, தீர்வு தொகையாக, 29.92 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது.
ஐந்தாண்டுக்கு மேல் நிலுவையிலுள்ள, 39 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்ந்த இரண்டு தம்பதியர், மீண்டும் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.
விபத்து இழப்பீடு தொடர்பாக, 214 வழக்கிலும், காசோலை மோசடி தொடர்பாக, 104 வழக்கிலும் சமரச தீர்வு ஏற்பட்டது.
விபத்தில் மகனை இழந்த ஒடிசாவை சேர்ந்த லோபின்டி காரம்மா குடும்பத்தினருக்கு, சமரச தீர்வு வாயிலாக, 18.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. மொத்தம், 25 அமர்வுகளில் விசாரணை நடந்தது.