/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லார் அருகே மரம் விழுந்து 3 கார்கள் சேதம்
/
கல்லார் அருகே மரம் விழுந்து 3 கார்கள் சேதம்
ADDED : ஜூலை 23, 2024 12:09 AM

மேட்டுப்பாளையம்;கல்லார் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் மீது மரம் விழுந்து கார்கள் சேதமானது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், கல்லார் அருகே ஜாம் கம்பெனி பகுதியில் சாலையோரம் கார் ஒர்க் ஷாப் கடை ஒன்று உள்ளது. இக்கடைக்கு அருகில் மிகவும் பழமையான பூங்கன் மரம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று மதியம் கல்லார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியது. அப்போது ஜாம் கம்பெனி அருகே இருந்த பழமையான மரம், கார் ஒர்க் ஷாப் கடை மற்றும் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் மீது விழுந்தது. இதில் கார்கள் சேதமடைந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், மரம் அறுக்கும் இயந்திரம் உதவியுடன் மரத்தினை வெட்டி அகற்றினர். கார்களில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே போல் கார் ஒர்க் ஷாப் ஊழியர்கள் சுதாரித்து கொண்டதால் மரம் விழும் போது, ஒர்க் ஷாப்பை வீட்டு வெளியேறினர். இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மரம் விழுந்ததால், மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.