/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு வங்கியில் முறைகேடு இருவருக்கு 3 ஆண்டு சிறை
/
கூட்டுறவு வங்கியில் முறைகேடு இருவருக்கு 3 ஆண்டு சிறை
கூட்டுறவு வங்கியில் முறைகேடு இருவருக்கு 3 ஆண்டு சிறை
கூட்டுறவு வங்கியில் முறைகேடு இருவருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : செப் 03, 2024 01:32 AM
கோவை:கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்த வழக்கில், இருவருக்கு தலா 3 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கரியாகவுண்டனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அன்னுார், ஒட்டர் பாளையத்தை சேர்ந்த சண்முகம், 44, பட்டனுாரை சேர்ந்த தங்கராஜ்,58, ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 15.27 லட்சம் ரூபாய் கையாடல் செய்தனர்.
புகாரின் பேரில், மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு போலீசார், 2009, டிச., 21ல் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் சரவணபாபு, இருவருக்கும், தலா மூன்றாண்டு சிறை, மொத்தம், 11,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, 15 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.