தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது


ADDED : மே 12, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே கேஸ் சப்ளையரிடம், வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம், 27. இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 29ம் தேதி, தனது நண்பரை பார்ப்பதற்காக கோத்தகிரி ரோடு ராமசாமி நகர் பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.1,000 ரொக்க பணத்தை பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து, ஹக்கீம் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஹக்கீமிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மகேஷ் குமார் 26, சூரியா 22, சரவணன் 26 என தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்து பணம் மற்றும் செல்போனை மீட்டனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us