/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.300 கோடி கோவில் நிலம் மீட்பு
/
ரூ.300 கோடி கோவில் நிலம் மீட்பு
ADDED : ஜூலை 30, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில், கரிய மாணிக்க பெருமாள் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளன. அவை ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்ட அதிகாரிகள், அவற்றை மீட்க, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
கருமத்தம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட இரு சர்வே எண்களில் உள்ள, 15 ஏக்கர் கோவில் நிலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன் சந்தை மதிப்பு, 300 கோடி ரூபாய். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.