/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பாலிஷ்' போட கொடுத்த 300 கிராம் நகைகள் மோசடி
/
'பாலிஷ்' போட கொடுத்த 300 கிராம் நகைகள் மோசடி
ADDED : மே 28, 2024 01:07 AM
கோவை;பாலிஷ் போட கொடுத்த, 300 கிராம் நகைகளை, மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சாரிபுல் மண்டல், 28. அதே பகுதியில், தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில், மேற்குவங்கம், சாம்பூர்டோலி, 24 என்பவர் பணிபுரிந்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம், சாம்பூர்டோலியிடம், 300 கிராம் நகைகளை கொடுத்து, பாலிஷ் போட்டு எடுத்து வருமாறு கொடுத்தார். நகைகளை பெற்றுக் கொண்ட சாம்பூர்டோலி மாயமானார்.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சாரிபுல் மண்டல் ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், சாம்பூர்டோலியை தேடி வருகின்றனர்.