/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முத்தண்ணன் குளத்தில் 300 சிலைகள் விசர்ஜனம்
/
முத்தண்ணன் குளத்தில் 300 சிலைகள் விசர்ஜனம்
ADDED : செப் 08, 2024 10:56 PM

கோவை:குடியிருப்போர் நல சங்கங்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை, நேற்று முத்தண்ணன் குளத்தில் விசர்ஜனம் செய்தனர்.
மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஏற்படுத்திக்கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வருவாய்த்துறையினர் வகுத்துக்கொடுத்த, அறிவுரைகளை விசர்ஜனம் செய்ய வருவோர் கட்டாயம் பின்பற்றுமாறு, ஒலிபெருக்கி வாயிலாக முத்தண்ணன் குளக்கரையில் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி, தீயணைப்புத்துறையினரின் மேற்பார்வையில், தன்னார்வலர்கள் உதவியுடன் ஒவ்வொரு சிலையாக விசர்ஜனம் செய்தனர். காலை முதல் மாலை வரை, 300 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதற்காக, முத்தண்ணன் குளக்கரையோரம் அதிக ஒளி ஏற்படுத்தும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மாலை 6:00 மணிக்கு மேல் விசர்ஜனத்துக்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.