/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுக்குமாடி குடியிருப்புக்கு 330 விண்ணப்பங்கள் சிறப்பு முகாமில் பெறப்பட்டன
/
அடுக்குமாடி குடியிருப்புக்கு 330 விண்ணப்பங்கள் சிறப்பு முகாமில் பெறப்பட்டன
அடுக்குமாடி குடியிருப்புக்கு 330 விண்ணப்பங்கள் சிறப்பு முகாமில் பெறப்பட்டன
அடுக்குமாடி குடியிருப்புக்கு 330 விண்ணப்பங்கள் சிறப்பு முகாமில் பெறப்பட்டன
ADDED : ஜூலை 02, 2024 02:29 AM

பொள்ளாச்சி;கிட்டசூராம்பாளையத்தில் நடந்த முகாமில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டி, 330 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பொள்ளாச்சி அருகே, கிட்டசூராம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை, எளிய, ஆதிதிராவிட இன மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
மொத்தம், 512 வீடுகள், 45.98 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு குடியிருப்பின் விலை, 8.98 லட்சமாகும். பயனாளிகள் பங்களிப்பு தொகை, ஒரு லட்சத்து, 48 ஆயிரத்து, 59 ரூபாயாகும். ஒவ்வொரு குடியிருப்பும், 400 சதுர அடி கட்டட பரப்பளவு கொண்டது.
ஒவ்வொரு வீடும், வரவேற்பறை, படுக்கையறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. குடியிருப்பில் வீடு வேண்டி விண்ணப்பம் செய்வதற்கு ஏதுவாக, கிட்ட சூராம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகர் திட்டப்பகுதியில் முகாம் நடந்தது. அதில், பொதுமக்கள், திரளாக பங்கேற்று விண்ணப்பங்களை ஆர்வமாக வழங்கினர்.
நேற்று காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடைபெற்றது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கிட்டசூராம்பாளையம் குடியிருப்பு பகுதியில், ஏற்கனவே நடந்த முகாமில், 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை வழங்கினர். அதில், தேர்வு செய்யப்பட்ட, 140 பேர் பணம் கட்டியுள்ளனர்.
தற்போது நடந்த முகாமில், 330 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை, 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்த அந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவை சரிபார்க்கப்படும், ஆவணங்கள் முறையாக சேர்க்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அதன்பின், விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும். மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து, ஏற்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கடிதம் அனுப்பப்படும். கடிதம் அனுப்பிய, 15 நாட்களுக்குள் பணம் செலுத்த அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.