/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
34 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
/
34 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
ADDED : ஆக 27, 2024 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;கோவில்பாளையம், கீரணத்தம் அருகே, 34 கிலோ எடையுள்ள போதை சாக்லேட்டை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கீரணத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் சமல், 40, கைது செய்து, அவரிடமிருந்து ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 400 ரூபாய் மதிப்பு, 34 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் குமார் சமல், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.