/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
34 சவரன் மோசடி செய்த பட்டறை உரிமையாளர் கைது
/
34 சவரன் மோசடி செய்த பட்டறை உரிமையாளர் கைது
ADDED : ஜூலை 31, 2024 02:21 AM
கோவை:கோவையில், 34 சவரன் தங்க நகை மோசடி செய்தது தொடர்பாக நகைப்பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சலீவன் வீதியைச் சேர்ந்தவர் தீபங்கர் கஜிரா, 31, தங்க நகை பட்டறை உரிமையாளர். இவரிடம் தெலுங்கு விதியைச் சேர்ந்த மற்றொரு தங்க நகை பட்டறை உரிமையாளரான ரனஜித் ராய், 29, என்பவர், 2020 அக்., 10ல், 34 சவரன் தங்க நகையை ஒரு மணி நேரத்தில் திருப்பித் தருவதாக வாங்கியுள்ளார்.
ஆனால், கூறியபடி தராத நிலையில், ரனஜித் ராயிடம் கேட்டபோது, சுகதேவ் என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும், அதை திரும்ப வாங்கி தருவதாகவும், ரனஜித் ராய் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை அவர் நகையை தராததால் போலீசில் தீபங்கர் கஜிரா புகார் அளித்தார்.
வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரனஜித் ராயை கைது செய்தனர். சுகதேவ் என்பவரை தேடி வருகின்றனர்.

