/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2024 - 25ல் 352 பேருக்கு தாலிக்கு தங்கம்
/
2024 - 25ல் 352 பேருக்கு தாலிக்கு தங்கம்
ADDED : மார் 08, 2025 11:40 PM
கோவை: திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ், மாவட்ட சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு, நேற்று கோவை வேளாண்பல்கலையில் நடந்தது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு தங்கம் மற்றும் நிதியுதவியை வழங்கினார்.
இதில், அவர் பேசியதாவது:
கோவையில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில், 1,51,310 உறுப்பினர்களை கொண்டு, 17,067 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 1,139 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் கட்டப்பட்டு வரும், பிரமாண்டமான நுாலகம் வரும், 2026 ஜன., மாதம் முதல்வரால் திறக்கப்படும்.
2024-25ம் நிதியாண்டுக்கான 352 பயனாளிகளுக்கு, ரூ.3.73 கோடி மதிப்பில் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி, தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அம்பிகா, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.