/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.100 கோடி மோசடி வழக்கு; கைதான 4 பேர் ஜாமின் மனு
/
ரூ.100 கோடி மோசடி வழக்கு; கைதான 4 பேர் ஜாமின் மனு
ADDED : பிப் 15, 2025 07:13 AM
கோவை; 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான, நான்கு பேர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை, வரும் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.
சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், அலுவலகம் நடத்தி இரட்டிப்பு பண மோசடி நடப்பதாக புகார் வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக, அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு,48, அவரது கூட்டாளிகள் ஜெயப்பிரதா,47, பாஸ்கர்,49, சையதுமுகமது,44, ஆகியோர் செய்யப்பட்டு, கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடமிருந்து, 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கைதான நான்கு பேரும், ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை, வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

