ADDED : மே 07, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கோவையை சேர்ந்தவர் விற்பனை பிரதிநிதி சசிக்குமார், 29. அவரது அம்மா உஷாராணி, 47, நண்பரின் குழந்தைகள் பாலமுருகன், 11, கார்த்திகேயன், 11, அவரது அக்கா மகள் மகித்தா, 8, ஆகியோருடன், நேற்று பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலைக்கு காரில் வந்தார்.
கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி பாலத்தில் சென்ற போது காரில் பழுது ஏற்பட்டதால், காரை ஓரமாக நிறுத்தி உள்ளார்.
அப்போது, பின் தொடர்ந்து வந்த கோட்டூரை சேர்ந்த கருப்புசாமி ஓட்டி வந்த டெம்போ, சசிக்குமாரின் காரின் மீது மோதியது. இதில், சசிக்குமார் காயமின்றி தப்பினார். காரினுள் இருந்த மற்ற நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்கள், சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

