/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சம் பறிமுதல்
/
ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 01, 2024 11:40 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 4 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, அனுப்பர்பாளையத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த அஜ்மீர் என்பவர், முறையான ஆவணங்களின்றி, 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* நெகமம் நான்கு ரோட்டில் நிலையான கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் வந்த பொள்ளாச்சி குஞ்சிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

