/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலில் காணிக்கை கையாடல் பூசாரிகள் 4 பேர் கைது
/
கோவிலில் காணிக்கை கையாடல் பூசாரிகள் 4 பேர் கைது
ADDED : ஏப் 26, 2024 11:25 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில், வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கையை கையாடல் செய்த 4 பூசாரிகளை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, 36, தண்டபாணி,47, விஷ்ணுகுமார்,33, சரவணன், 49 உள்ளிட்ட நான்கு பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் ஆகிய நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.---

