ADDED : ஜூலை 19, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கோவை அரிமா அணியினர் 36.4 ஓவரில் 99 ரன் எடுத்தனர்; யோகேஷ்குமார் 50 ரன் எடுத்தார்; எதிரணியின் சதீஷ்குமார் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியினர் 14.1 ஓவரில் 101 ரன் எடுத்து வென்றனர். ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர் 39.5 ஓவரில் 129 ரன் எடுத்தனர்.
பிரதீப் பாண்டியன் 67 ரன் எடுத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி அணியினர் 29.4 ஓவரில் 131 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். கவுதமராஜ் 47 ரன் எடுத்தார். எதிரணியின் ராஜேஷ் நான்கு விக்கெட் எடுத்தார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
