தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதுமார்க்கெட்டிலுள்ள பழைய கடைகளை என்ன செய்ய போறாங்க! அமைச்சர் உத்தரவு நகராட்சிக்கு வரவில்லை

புதுமார்க்கெட்டிலுள்ள பழைய கடைகளை என்ன செய்ய போறாங்க! அமைச்சர் உத்தரவு நகராட்சிக்கு வரவில்லை

புதுமார்க்கெட்டிலுள்ள பழைய கடைகளை என்ன செய்ய போறாங்க! அமைச்சர் உத்தரவு நகராட்சிக்கு வரவில்லை


UPDATED : ஜூலை 19, 2026 05:21 PM

ADDED : ஜூலை 19, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 05:21 PM ADDED : ஜூலை 19, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: 'புது மார்க்கெட்டில் கடைகள் இடிக்கப்படும் என நகராட்சியும், பழைய கடைகளே தொடர்ந்து இயங்கும்,' என அமைச்சர் வாய்மொழி உத்தரவும் வழங்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் வாய்மொழி உத்தரவால் மார்க்கெட் இடிப்பு ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர். வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான, 330 க்கும் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மாத வாடகை அடிப்படையில் செயல்படுகின்றன.

இந்நிலையில் மார்க்கெட் பகுதியில் தற்போது உள்ள கடைகள் அனைத்தும், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடமாகும்.

இந்த கட்டடத்தை இடித்து, 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்ட, சட்டசபையில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், நகராட்சி கூட்டத்தில் மேற்படி வணிக வளாகம் கட்ட ஒப்புதலும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், புதுமார்க்கெட் பகுதியில் திட்டமிட்டபடி வணிகவளாகம் கட்டும் பணி துவங்க வசதியாக, 15 நாட்களுக்குள் கடைகளை காலி செய்ய நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளுக்கு, கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்கெட் கடை வியபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'புதுமார்க்கெட் பகுதியில் வாடகை அடிப்படையில் செயல்படும் நகராட்சி கடைகள் அனைத்தும் நல்ல நிலையில் தான் உள்ளன. கடைகளை இப்போது இடிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நகராட்சியின் திடீர் நடவடிக்கையால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை, உடனடியாக தமிழக அரசு ரத்து செய்து, அதற்கான உத்தரவை வெளியிட வேண்டும்' என்றனர்.

இதனிடையே வால்பாறை த.வெ.க., நிர்வாகிகள் சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை அமைச்சர் விக்னேசை நேரில் சந்தித்து, மார்க்கெட் பகுதியில் வணிகவளாகம் கட்டும் பணியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கையால் , மார்க்கெட் வியாபாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

நகராட்சி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, ''வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை முறைப்படி காலி செய்ய, 15 நாள் அவகாசத்துடன் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வணிகவளாகம் கட்டும் பணியை ரத்து செய்தற்கான எந்த அறிவிப்பு, அரசிடம் இருந்து முறையாக வரவில்லை. நகராட்சிக்கு உத்தரவு வந்தால், மேற்படி வணிக வளாகம் கட்டும் பணி நிறுத்தப்படும்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us