/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சிபுரி ஆதினத்தில் 48ம் நாள் மண்டல பூஜை
/
காமாட்சிபுரி ஆதினத்தில் 48ம் நாள் மண்டல பூஜை
ADDED : ஏப் 27, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை காமாட்சிபுரி ஆதினம், 51வது சக்தி பீடம் மகாசமஸ்தானம் ஆதி குரு முதல்வரும் ஞானகுருவுமான சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்து, 48ம் நாள் மண்டல பூஜை, ஒண்டிப்புதுாரிலுள்ள காமாட்சிபுரி ஆதினத்தில், இன்று நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு வேள்வி வழிபாடு துவங்கி பகல் 1:00 மணி வரை தொடர்கிறது. 108 சங்காபிஷேகமும், மஹாதீபாராதனையும் சக்தி பீடத்தில் நடக்கிறது. அனைவரும் பங்கேற்று அருள் பெற, காமாட்சிபுரி ஆதினம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

