/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளுக்கு 4ஜி பி.ஓ.எஸ்., கருவி இன்று வழங்கப்படுவதால் ரேஷன் இல்லை
/
ரேஷன் கடைகளுக்கு 4ஜி பி.ஓ.எஸ்., கருவி இன்று வழங்கப்படுவதால் ரேஷன் இல்லை
ரேஷன் கடைகளுக்கு 4ஜி பி.ஓ.எஸ்., கருவி இன்று வழங்கப்படுவதால் ரேஷன் இல்லை
ரேஷன் கடைகளுக்கு 4ஜி பி.ஓ.எஸ்., கருவி இன்று வழங்கப்படுவதால் ரேஷன் இல்லை
ADDED : மே 22, 2024 01:30 AM

கோவை:கோவையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 4ஜி நெட் ஒர்க்கில் இயங்கும் புதிய பி.ஓ.எஸ்., கருவி, இன்று வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம், 11.40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ரேஷன்கடைகளில் பி.ஓ. எஸ்., கருவி மூலம் ரேஷன் கார்டுதாரர்களில், கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த கருவி, 2ஜி நெட் ஒர்க்கில் செயல்படுவதால், அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டு வேலை செய்வதில்லை. இதனால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த 2ஜி கருவியை மாற்றி, 4ஜி நெட் ஒர்க்கில் இயங்கும் புதிய கருவியை வழங்க வேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த பிரச்னைக்கு இப்போது தீர்வு கிடைத்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 4 ஜி நெட் ஒர்க்கில் இயக்கும், புதிய பி.ஓ.எஸ்., கருவி வழங்க, கோவை மாவட்ட வழங்கல் துறை ஏற்பாடு செய்துள்ளது. முதல் கட்டமாக, 1200 ரேஷன் கடைகளுக்கு புதிய 4ஜி பி.ஓ.எஸ்., கருவி இன்று வழங்கப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் இப்போது பயன்படுத்தி வரும் 2ஜி பி.ஓ.எஸ்., கருவிகளை திரும்பப் பெற்று, 4ஜி நெட் ஒர்க்கில் இயங்கும், புதிய கருவிகள் 1200 கடைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதனால் ரேஷன் கடைகளில் நாளை(இன்று) பொருட்கள் வழங்கப்பட மாட்டாது. விரைவில் அனைத்து கடைகளுக்கும் பி.ஓ.எஸ்., கருவி வழங்கப்படும்.
இதில் இரண்டு சிம்கார்டுகள் பொருத்தப்பட்டு இருப்பதால், நெட் ஒர்க் பிரச்னை வராது. கைரேகை பதிவு பிரச்னைக்கும், விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

