/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 நாட்கள் மிதமான மழை; வேளாண் பல்கலை கணிப்பு
/
5 நாட்கள் மிதமான மழை; வேளாண் பல்கலை கணிப்பு
ADDED : ஜூன் 05, 2024 08:40 PM
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில்,வரும் ஐந்து நாட்கள் மிதமான மழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன்படி, இன்று 28மி.மீ., நாளை14மி.மீ., 8ம் தேதி 3 மி.மீ., 9ம் தேதி 4 மி.மீ., மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை, 31-34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் இரவு நேரம் 21-24 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 90 சதவீதமாகவும் மாலை நேரம் 50 -70 சதவீதமாகவும் இருக்கும்.
மண் ஈரத்தினை பொறுத்து, இறவை பயிர்களுக்கு நீர்பாசனத்தை ஒத்திவைக்க வேண்டும். மருந்து தெளிப்பை காலை நேரங்களில், மழை இல்லாத வானிலை எதிர்பாக்கப்படும் போது மட்டும் மேற்கொள்ளலாம்.
எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி, நிலக்கடலையில் களை எடுக்கவும். கால்நடைகளை, கடந்தவார மழையில் முளைத்த புதிய புற்களை மேயவிடுவதை தவிர்ப்பதனால், கால்நடைகளில் குடற்புழுக்களின் தாக்கத்தை தவிர்க்கலாம்.