/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 சவரன் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலை
/
5 சவரன் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலை
ADDED : ஆக 08, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:வீட்டு அலமாரியில் இருந்த ஐந்து சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை திருடியவரை போலீசார் தேடுகின்றனர்.
கணபதி, கே.ஆர்.ஜி.நகர் முதல் வீதியை சேர்ந்தவர் அழகப்பன்,42; டிரைவர். நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு கதவை பூட்டிவிட்டு, அருகே வசிக்கும் வீட்டின் உரிமையாளரிடம் சாவியை கொடுத்துவிட்டு, இவர் பணிக்கு சென்றுள்ளார்.
மாலையில் வீடு திரும்பியபோது, அலமாரியில் இருந்த ஐந்து சவரன் தங்க நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர் திருடிசென்றது தெரிந்தது. சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.