/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்ததான முகாமில் 50 பேர் தானம்
/
ரத்ததான முகாமில் 50 பேர் தானம்
ADDED : செப் 01, 2024 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின், 30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மருத்துவ சேவை அணி மற்றும் கோவை அரசு மருத்துவமனை சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.
கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி நடைபெற்ற ரத்த தான முகாமில், 50 பேர் ரத்ததானம் செய்தனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோவை மத்திய மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமை தாங்கினார்.