/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்திக்கு 5,000 சிலை இந்து முன்னணி தலைவர் தகவல்
/
விநாயகர் சதுர்த்திக்கு 5,000 சிலை இந்து முன்னணி தலைவர் தகவல்
விநாயகர் சதுர்த்திக்கு 5,000 சிலை இந்து முன்னணி தலைவர் தகவல்
விநாயகர் சதுர்த்திக்கு 5,000 சிலை இந்து முன்னணி தலைவர் தகவல்
ADDED : ஆக 11, 2024 10:27 PM
கோவை:இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம், காந்தி பார்க்கில் நடைபெற்றது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசியதாவது:
நடப்பாண்டு தமிழகம் முழுதும், விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். கோவை மாவட்டத்தில் 5,000 சிலைகள் நிறுவப்படும். விசர்ஜன நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்கவுள்ளார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. ஹிந்துக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுகிறது.
அங்குள்ள ஹிந்துக்களைப் பாதுகாக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 12ம் தேதி(நாளை) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் தசரதன், மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், செயலாளர் சண்முகம், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் உட்பட மாநில, கோட்ட, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.