/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் வேலை வாய்ப்பு 51 பேருக்கு கிடைத்தது
/
தனியார் வேலை வாய்ப்பு 51 பேருக்கு கிடைத்தது
ADDED : பிப் 24, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த, தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 51 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடந்தது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள், 527 பேர், தங்கள் கல்விச்சான்றுகளுடன் பங்கேற்றனர்;
51 முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, பல்வேறு பணிக் காலியிடங்களுக்கு, 51 பேரை தேர்வு செய்தனர். இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு, 65 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

