/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 53வது வாலிபால் போட்டி
/
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 53வது வாலிபால் போட்டி
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 53வது வாலிபால் போட்டி
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 53வது வாலிபால் போட்டி
ADDED : ஆக 06, 2024 06:58 AM

கோவை: கேந்திரிய வித்யாலயா பள்ளியின், 53வது வாலிபால் போட்டி நடைபெற்றது.
கேந்திரிய வித்யாலயா பிராந்திய, 53வது வாலிபால் போட்டி சூலுார் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கடந்த, 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து, 270 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவ - மாணவிகளுக்கு, 14 மற்றும், 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 14 வயது பிரிவு போட்டியில் மாணவிகள் அணியில் சூலுார் கேந்திரிய வித்யாலயா விமானப்படை பள்ளி வெற்றி பெற்றது. கேந்திரிய வித்யாலயா டி.ஜி.கியூ.ஏ பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது.
மாணவர் பிரிவில் டி.ஜி.கியூ.ஏ முதல் இடத்தையும், சூலுார் கேந்திரிய வித்யாலயா விமானப்படை பள்ளி இரண்டாவது இடத்தையும், மண்டபம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மூன்றாது இடத்தையும் பிடித்தது.
17 வயது பிரிவு மாணவிகள் அணியில், சூலுார் கேந்திரிய வித்யாலயா விமானப்படை பள்ளி முதல் இடத்தையும், மண்டபம் கேந்திரிய வித்யாலயா பள்ளி இரண்டாவது இடத்தையும், ஊட்டி மூன்றாவது இடத்தையும் பெற்றது.
மாணவர்கள் அணியில் சூலுார் கேந்திரிய வித்யாலயா விமானப்படை பள்ளி முதல் இடத்தையும், டி.ஜி.கியூ.ஏ பள்ளி இரண்டாவது இடத்தையும், நம்பர் 1 மதுரை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
வெற்றி பெற்ற நான்கு அணியினரும், புவனேஸ்வர் மற்றும் பஞ்சாப்பில் நடைபெறும் தேசிய அளவிளான போட்டியில், அடுத்த மாதம் விளையாட உள்ளனர்.
விளையாட்டிற்கான ஏற்பாடுகளை, சூலுார் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மிஸ்ரா மற்றும் சந்திரசேகர் செய்து இருந்தனர். கோவை மாவட்ட வாலிபால் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்தனர்.