/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.54.84 கோடி 'பயோமைனிங்' டெண்டர் ஏனோ நிறுத்தி வைத்து மாநகராட்சி 'மக்கர்'
/
ரூ.54.84 கோடி 'பயோமைனிங்' டெண்டர் ஏனோ நிறுத்தி வைத்து மாநகராட்சி 'மக்கர்'
ரூ.54.84 கோடி 'பயோமைனிங்' டெண்டர் ஏனோ நிறுத்தி வைத்து மாநகராட்சி 'மக்கர்'
ரூ.54.84 கோடி 'பயோமைனிங்' டெண்டர் ஏனோ நிறுத்தி வைத்து மாநகராட்சி 'மக்கர்'
ADDED : ஜூலை 23, 2024 12:00 AM
கோவை;வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பையை, ரூ.54.84 கோடியில் 'பயோமைனிங்' முறையில் அழிக்க கோரப்பட்ட டெண்டர் குறித்து, இறுதி முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, கோவை மாநகராட்சியில் மர்மமாக இருக்கிறது.
வெள்ளலுார் கிடங்கில் தேங்கியிருந்த பழைய குப்பையை முதல்கட்டமாக மேலாண்மை செய்ததில், 50 ஏக்கர் மீட்கப்பட்டது. மீதமுள்ள, ஏழு லட்சத்து, 78 ஆயிரம் டன் பழைய குப்பையை 'பயோமைனிங்' முறையில் அழிக்க, ரூ.54.84 கோடிக்கு மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இப்பணி மேற்கொள்ள மாநகராட்சி டெண்டர் கோரியது.
'பயோமைனிங்' பணியை தற்போது மேற்கொள்ளும் நிறுவனம், கோல்கட்டா நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்நிறுவனங்களின் தொழில்நுட்ப தகுதி சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின், விலைப்புள்ளி அடிப்படையிலான ஒப்பந்தப்புள்ளியை திறந்து, டெண்டர் இறுதி செய்ய வேண்டும். டெண்டரை இறுதி செய்யாமல், மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, 'டெண்டரை கேன்சல் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. மறுடெண்டர் கோரப்படலாம். இத்திட்டத்தை செயல்படுத்தினால், வெள்ளலுார் கிடங்கில், 58 ஏக்கர் நிலம் மீட்கப்படும்' என, மாநகராட்சி அலுவலர்கள் கூறினர்.