/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட 565 குற்றங்கள் கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் தகவல்
/
முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட 565 குற்றங்கள் கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் தகவல்
முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட 565 குற்றங்கள் கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் தகவல்
முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட 565 குற்றங்கள் கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் தகவல்
ADDED : ஆக 05, 2024 10:25 PM

கோவை:தொலைந்துபோனதாக புகார் அளித்த, 504 பேரின் மொபைல் போன்கள் கோவை எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நிறைவில், கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.94 லட்சம் மதிப்பிலான, 504 தொலைந்து போன மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இழந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.3 கோடியே, 20 லட்சம் மதிப்பிலான, 2,300 மொபைல் போன்கள் தனிப்படை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில், 1,100 சி.எஸ்.ஆர்., பதிவு செய்யப்பட்டதில், 504 மொபைல் போன்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொபைல் போன் பறித்தது தொடர்பாக, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், 'சைபர் கிரைம்' குற்றங்கள் தொடர்பாக, 84 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், ஆறு வழக்குகள் நிதி சாராதது. பணத்தை இழந்தவர்களுக்கு, இந்த ஆண்டில் ரூ.1.20 கோடி திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஐகோர்ட் உத்தரவின்படி, எப்.ஐ.ஆர்., இல்லாமல் சி.எஸ்.ஆர்., மூலமும் இழந்தவர்களிடம் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்தாண்டு, 3,700 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு, 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; 13 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து மொத்தமாக கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, கடந்த மே முதல் இதுவரை, 10 பெரிய கும்பல்களை கைது செய்துள்ளோம். இவர்களிடம், 20 முதல், 60 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் வரை, 130 'போக்சோ' வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில், 10 வழக்குகளுக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளோம். 'பள்ளிக்கூடம்' திட்டம் வாயிலாக, அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இத்திட்டம் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளில், 565 சிறு குற்றங்கள் கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.