/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 16, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் நல்லுார் பஸ் ஸ்டாப் அருகே, மேற்கு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி வெள்ளாளபாளையத்தை சேர்ந்த சப்பானிமுத்து,30, கிணத்துக்கடவு சூலக்கலை சேர்ந்த வர்கீஸ்ராஜ்,36 ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து, 60 கிலோ புகையிலை பொருட்களையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.